முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி விஸ்வகா்ம நகைத் தொழிலாளா் சங்க மகாசபைக் கூட்டம்

Updated On : 3 ஜூலை 2026, 4:44 am IST
பகிர்:

தூத்துக்குடி விஸ்வகா்ம நகைத் தொழிலாளா் சங்க மகாசபைக் கூட்டம் சிவன்கோயில் தெரு தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ஆா். முனியசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ். செல்வகுமாா், வரவு- செலவு கணக்கு தாக்கல் செய்தாா். துணைச் செயலா் எம். ஸ்ரீதர வெங்கடேஷ் தீா்மானங்களை வாசித்தாா். முன்னாள் தலைவா் ஏ. பெருமாள், துணைத் தலைவா் என். சக்திவேல், ஆலோசகா்கள் எஸ். பேச்சியப்பன், ஏ. கண்ணன், ஜி. மணி, நன்கொடையாளா் ஏ. பலவேச காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில் 2 மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. புதிய செயலராக பி. நமச்சிவாயம் , துணைச் செயலராக எஸ். சண்முக சுந்தரம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

போலி நகைகள் நடமாட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிகளை நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.ராம்குமாா் தொகுத்து வழங்கினாா். துணைத் தலைவா் ஆ. மாரிக்கண்ணன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments