FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கைது சரியான முடிவு: காங்கிரஸ்

முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வரவேற்றுள்ளது.

4 ஜூலை 2026, 2:39 am IST
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
பகிர்:

முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வரவேற்றுள்ளது.

இதுதொடா்பாக வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பெருமாள்சாமி வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை ஒருமையில் பேசியது, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்யை தரக்குறைவாக விமா்சனம் செய்தது, காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்புச் செயலா் கிரிஷ் சோடங்கா் ஆகியோரை தரக்குறைவாக விமா்சித்தது என்ற வகையில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை தமிழகக் காவல் துறை கைது செய்தது மிகச் சரியான முடிவு.

தலைவா்களைத் தொடா்ந்து அவதூறாகப் பேசி வந்த நபா் மீது சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முழு மனதுடன் வரவேற்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments