முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்பிணை மனு தள்ளுபடி
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணனின் முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...
முதல்வர் ச. ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்பிணை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அத்தொகுதியின் எம்எல்ஏவும் திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நகரச் செயலர் செல்வம் என்பவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் ஆத்தூர் போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் முன்பிணை கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்துள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவருடைய மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராகிருஷ்ணன் தரப்பில், தனது பேச்சு தொடர்பாக அவதூறு வழக்குதான் தாக்கல் செய்ய வேண்டும். காவல்துறை நேரடியாக வழக்கு தொடர முடியாது என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், கடந்த 7 முறை எம்எல்ஏவாக இருந்தவர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும் எனக்கூறி, முன்பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 1967 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆளுகின்றனர். எனவே, எம்எல்ஏவாக இருக்கும் மனுதாரர் இதுபோல பேசலாமா? என கேள்வி எழுப்பினார்.
பின்னர், முன்பிணை கோரி அனிதா ரராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Defamatory remarks against the CM Vijay: Former Minister Anita Radhakrishnan's anticipatory bail plea dismissed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.