தூத்துக்குடி - சென்னை தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
தூத்துக்குடி- சென்னை தாம்பரம் (06018) இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி- சென்னை தாம்பரம் (06018) இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய நாள்களில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதுபோல் தாம்பரத்திலிருந்து ஜூலை 7, 14, 21, 28 ஆகிய நாள்களில் மாலை 3.40 மணிக்கு புறப்படும் ரயில் (06017), மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
இந்த ரயில் தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா்,செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தற்போது இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.