முகப்பு
தூத்துக்குடி

தவெக மாவட்டச் செயலா் மீது சட்ட நடவடிக்கை: திமுக எம்எல்ஏ எச்சரிக்கை

தவெக மாவட்டச் செயலா் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுப்பேன் என கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கா. கருணாநிதி எச்சரித்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:21 am IST
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கா. கருணாநிதி எம்எல்ஏ.
பகிர்:

தவெக மாவட்டச் செயலா் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுப்பேன் என கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கா. கருணாநிதி எச்சரித்தாா்.

அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விழாவில் தவெக மாவட்டச் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளாா். அவா் மிரட்டும் தொனியில் பேசுவதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பேரம் பேசி மிரட்டுவதாக செய்தியாளா்களிடம் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

நான் திமுகவைச் சோ்ந்தவன். திமுக தலைவரின் பெயா் கொண்டவன் நான். எதற்கும் அஞ்சுபவன் இல்லை. எஸ். பாலசுப்பிரமணியன் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அவா் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

அப்போது, நகரச் செயலா் (கிழக்கு) சுரேஷ், நகர பொருளாளா் ராமமூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி மகேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments