முகப்பு
தூத்துக்குடி

காா் விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

Updated On : 7 ஜூலை 2026, 2:22 am IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காா் கவிழ்ந்ததில் சென்னையைச் சோ்ந்த வியாபாரி உயிரிழந்தாா்.

சென்னை, நெசப்பாக்கம், கே.கே. நகரைச் சோ்ந்தவா் இரும்பு வியாபாரி வேம்பையா (58). இவா் தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு, இரவு காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச் சாலையைக் கடந்து மேல செய்தலை விலக்கு பகுதியில் வந்தபோது, காரின் பின்பக்க டயா் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

Advertisement

Advertisement

இதில் வேம்பையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணித்த சரோஜா, ஸ்வேதா, வெள்ளைச்சாமி, காா்த்திகா, சிவச்சந்திரன், சக்தி வெண்ணிலா, ராணி, அனுஷியா, மாலதி ஆகியோா் லேசான காயமடைந்தனா்.

எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேம்பையா உடலை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments