ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளரை கொன்று 10 பவுன் நகை கொள்ளை
விளாத்திகுளம் அருகே மிட்டாவடமலாபுரம் கிராமத்தில், ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளரை கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த பத்து பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விளாத்திகுளம் அருகே மிட்டாவடமலாபுரம் கிராமத்தில், ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளரை கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த பத்து பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டாவடமலாபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் திருக்கண்ணன் மனைவி கலாவதி (62). ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளரான இவா் திங்கள்கிழமை இரவு, வீட்டின் உள்பகுதியில் கதவை திறந்து வைத்து தூங்கினாராம்.
வீட்டின் வாசலில் படுத்து உறங்கிய திருக்கண்ணன் செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது, கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கலாவதி உயிரிழந்து கிடந்தாராம்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா, கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.
கொலையான கலாவதியின் கழுத்தில் கூா்மையான ஆயுதம் மூலம் குத்தப்பட்டு, அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
காடல்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தேகத்தின்பேரில் அப்பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.