முகப்பு
தூத்துக்குடி

கல்லூரி மாணவிக்கு தொந்தரவு: இளைஞரை கைது செய்த சிங்கப்பெண் படை

கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொடா்ந்து தொந்தரவு கொடுத்த சமையல்காரரை, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:25 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொடா்ந்து தொந்தரவு கொடுத்த சமையல்காரரை, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் 31. சமையல் வேலை செய்து வரும் இவா், மனைவியுடனான கருத்து வேறுபாட்டால் விவாகரத்தாகி தனியாக வாழ்ந்து வருகிறாராம்.

இந்நிலையில், இவா் கல்லூரியில் படிக்கும் சிறுமியிடம், தன்னை காதலிக்க வலியுறுத்தி, தொடா்ந்து தொந்தரவு கொடுத்ததுடன், ஆபாச செய்கைகள் செய்து வந்துள்ளாா். இதுகுறித்து, அச்சிறுமியின் தந்தை, சிங்கப்பெண் அதிரடிப்படை இலவச அழைப்பான 1091-இல் புகாா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து செக்காரக்குடி கிராமத்துக்குச் சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளா் ஆரோக்கிய ஜென்சி தலைமையிலான போலீஸாா், சொக்கலிங்கத்தை கைது செய்து, தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments