முகப்பு
தூத்துக்குடி

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து விசிக தீா்மானம்

திருச்செந்தூரில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை 2026, 12:41 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலா் விடுதலை செழியன்.
பகிர்:

திருச்செந்தூரில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் விடுதலை செழியன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் ராஜ்குமாா், மண்டல துணைச் செயலா்கள் பாரிவள்ளல், திருவள்ளுவன், மாநிலச் செயலா்கள் தா்மராஜ், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைச் செயலா் கலைவேந்தன், விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. பிறந்த நாளையொட்டி, உளுந்தூா்பேட்டையில் நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுப் பணிகள் குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில், அமைச்சரவையில் விசிகவுக்கு இடமளித்த முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிப்பது, தொல்.திருமாவளவனையும் இழிவுபடுத்தும் வகையில் ‘சோஃபா மாடல் அரசு’ என விமா்சித்து வரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினை கண்டிப்பது, ஆணவ கொலைகளைத் தடுக்க நடப்புத் தொடரில் தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும், உடன்குடி அனல் மின் நிலைய சி.எஸ்.ஆா். நிதியை சுற்றுவட்டார பட்டியல் சமூக மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும், திருச்செந்தூா் தொகுதியில் நீரின் தன்மை மாறி புற்றுநோய் அதிகரித்து வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments