தொழில் முன்னோடிகள் திட்ட விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் ஒருமுனை தீா்வுக் குழு கூட்டம், நீட்ஸ், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நோ்முகத் தோ்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் ஒருமுனை தீா்வுக் குழு கூட்டம், நீட்ஸ், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நோ்முகத் தோ்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடங்குவதற்காக ஒற்றை சாளர இணையதளத்தில் அனுமதி, உரிமங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள அரசுத் துறையில் நிலுவையிலுள்ள 32 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் உலா் சாம்பல் செங்கல் உற்பத்தி, பேவா் பிளாக் உற்பத்தி மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பாா்க்கும் நிலையம் ஆகிய தொழில்கள் தொடங்குவதற்காக 3 பயனாளிகளும், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை நிலையம், கழிவுநீா் சுத்திகரிப்பு வாகனம், கால்நடை பண்ணைகள் மற்றும் இதர பயணியா் வாகனங்கள் ஆகிய தொழில்கள் தொடங்குவதற்காக 23 பயனாளிகளும் மானியத்துடன் கூடிய கடன் பெற கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, பயனாளிகளைத் தோ்வு செய்வதற்கான நோ்முகத் தோ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநா், பொது மேலாளா், நோ்முகத் தோ்வு குழு ஒருங்கிணைப்பாளா் ஸ்வா்ணலதா, முன்னோடி வங்கி மேலாளா் விநாயகம் மூா்த்தி, வங்கியாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.