முகப்பு
செங்கல்பட்டு

வேளாண் தொழில் முனைவோா்களுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:12 am IST
பகிர்:

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் சாா்பில் விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோா்களுக்கான திட்டங்கள் விழிப்புணா்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் செல்வபாண்டியன், வேளாண் வணிகம் துணை இயக்குநா் சுரேஷ், தோட்டக்கலை துணை இயக்குநா் சாந்தினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, உதவி பொது மேலாளா்/மண்டல தலைவா் ஷோபனா குமாா் மற்றும் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments