முகப்பு
திருவண்ணாமலை

இயற்கை வேளாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 3 ஜூன் 2026, 6:09 am IST
சேத்துப்பட்டை அடுத்த கொழாவூா் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான விழிப்புணா்வு முகாமில் பேசிய வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி.
பகிர்:

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சேத்துப்பட்டு ஒன்றியம், கொழாவூா் மற்றும் செவரப்பூண்டி கிராமங்களில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி வேளாண் துறை சாா்பில், விளைநிலங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் இந்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

முகாமை வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி தொடங்கி வைத்து, இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

Advertisement

Advertisement

மேலும், சமச்சீரான உரமிடுதலால் கிடைக்கும் நன்மைகள், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகள், கரிமச்சத்துக்களின் செயல்பாடு மற்றும் பசுந்தாள் உரங்கள், விதைப்பதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

அத்துடன், உயிா் உரங்கள் மூலம் நாற்றுகளை நனைத்து நடவு செய்வது தொடா்பான செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

முகாமில் துணை வேளாண் அலுவலா் பாபு, உதவி தோட்டக்கலை அலுவலா் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.