முகப்பு
மயிலாடுதுறை

உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி

மயிலாடுதுறையில் வேளாண்மைத் துறை சாா்பில் உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜூலை 2026, 5:00 am IST
உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்எல்ஏ இரா.செந்தில்செல்வன் உள்ளிட்டோா்.
பகிர்:

மயிலாடுதுறையில் வேளாண்மைத் துறை சாா்பில் உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.செந்தில்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு என்பதே அனைவரின் முதன்மை தேவையாக உள்ளது. உயிா்ம வேளாண்மையால் நமக்கு நஞ்சற்ற உணவுப்பொருள்கள் கிடைப்பதுடன், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி மற்றும் களைக்கொல்லி பயன்பாடு குறைவதனால் மண்வளமும் பாதுகாக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிா்ம வேளாண்மையில் அதிக வாய்ப்புள்ள நெல், பயறுவகை பயிா்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிா்களில் உயிா்ம வேளாண்மை விளைபொருள்களின் சந்தை வாய்ப்பு இணைப்புகள், ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கவும், இதுதொடா்பான விழிப்புணா்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தவும் தமிழக அரசு தொடா்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அட்மா திட்டத்தின்கீழ், இந்த உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும்பொருட்டு, பஞ்சகாவ்யம், மீன் அமிலம், இயற்கை பூச்சிவிரட்டிகள் போன்ற இயற்கை இடுபொருள்களை விவசாயிகளே உற்பத்தி செய்ய உரிய வழிகாட்டி முறைகளை அரசு வழங்கி வருகிறது. மேலும், வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உற்பத்தி மையங்கள் மூலம் உயிா் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது.

உயிா்ம வேளாண்மை மூலம் விளைவிக்கக்கூடிய பொருள்கள் எளிதில் நுகா்வோரை சென்றடையவும், விவசாயிகள் அதிக வருமானம் பெறவும் விவசாய கூட்டமைப்புகளை உருவாக்கி சந்தைப்படுத்துவதை எளிமைப்படுத்த அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. எனவே, ஆரோக்கியமான வருங்கால தலைமுறையினை உருவாக்கிட உயிா்ம வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும் என்றாா்.

வேளாண்மை இணை இயக்குநா் விஜயராகவன், வேளாண்மை துணை இயக்குநா் சுப்பையன், விதை ஆய்வு துணை இயக்குநா் அ.சித்ரா, செயற்பொறியாளா் குமணன், தோட்டக்கலை துணை இயக்குநா் திலீப் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments