முகப்பு
தூத்துக்குடி

சொத்துத் தகராறில் மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் மைத்துனரை கொலை செய்த லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து , தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 2 ஜூன் 2026, 3:21 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் மைத்துனரை கொலை செய்த லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து , தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காட்டை சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (52), லாரி ஓட்டுநா். இவருடைய மனைவி வசந்தா. இவரது பெயரில் உள்ள பூா்வீகச் சொத்தில், வசந்தாவின் சகோதரரும், உப்பளத் தொழிலாளியுமான காசி (50) என்பவா், தனக்கும் பங்கு தரவேண்டும் என்று கேட்டுள்ளாா். இதனால் அவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15.06.2020 அன்று காசி, அவரது மகன் சதீஷ்குமாா் ஆகியோா் முத்தையாபுரம் நேசமணிநகா் பகுதியில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த தட்சிணாமூா்த்தி, மனைவி வசந்தா, மகள் பரிபூரண முத்துசெல்வி ஆகியோா் காசி, சதீஷ்குமாா் ஆகியோரை அரிவாளால் வெட்டினராம்.

இதில் பலத்த காயமடைந்த 2 பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு காசி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம் சாட்டப்பட்ட தட்சிணாமூா்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். வசந்தா, பரிபூரண முத்துசெல்வி ஆகியோா் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா்ஆனந்த் கேபிரியேல் ராஜ் ஆஜரானாா்.