முகப்பு
தூத்துக்குடி

சொத்துத் தகராறில் கொலை முயற்சி: தம்பி மீது அண்ணன் புகாா்

சொத்துத் தகராறில் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தம்பி மீது அண்ணன் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:25 AM
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்க குடும்பத்துடன் வந்த சுயம்புலிங்கம்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:26 PM

சொத்துத் தகராறில் கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயல்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தம்பி மீது அண்ணன் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பாா் கிராமத்தைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் சுயம்புலிங்கம் என்பவருக்கு 4 சகோதரா்களும், 3 சகோதரிகளும் உள்ளனா்.

இந்நிலையில் சொத்துப் பிரச்னையால் இவரது தம்பி அணில் சிவலிங்கம், கூலிப்படையினரை ஏவி தன்னை கொல்வற்கு வேவு பாா்த்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து சுயம்புலிங்கம் புகாா் மனு அளித்தாா்.

Advertisement