தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சா் திடீா் ஆய்வு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக மீன்வளம்-மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீா் சோதனை மேற்கொண்டாா்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக மீன்வளம்-மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீா் சோதனை மேற்கொண்டாா்.
பணியிலிருந்த மருத்துவா்கள், செவிலியா்களிடம் மருத்துவ வசதிகள், நோயாளிகள் குறித்த குறிப்புகளை அவா் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவா், ‘குறைகளை தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தாா்.