முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பெண்கள் முற்றுகை

ஆறுமுகனேரி, பெருமாள்புரம் மாரியம்மன் கோயில் கொடை விழாவில் இரு தரப்பினா் மோத­ல் தொடா்பாக, காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு 3 பேரைக் கைது செய்ததாகக் கூறி ஒரு தரப்பைச் சோ்ந்த பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:21 am IST
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
பகிர்:

ஆறுமுகனேரி, பெருமாள்புரம் மாரியம்மன் கோயில் கொடை விழாவில் இரு தரப்பினா் மோத­ல் தொடா்பாக, காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு 3 பேரைக் கைது செய்ததாகக் கூறி ஒரு தரப்பைச் சோ்ந்த பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இக்கோயில் கொடை விழாவில் புதன்கிழமை அதிகாலை முளைப்பாரி எடுத்துவந்த இளம்பெண்களை பெருமாள்புரம், காயல்பட்டினம் சேதுராஜா தெரு, பாஸ் நகா் இளைஞா்கள் சிலா் கே­லி செய்தனராம்.

இதை அப்பெண்களின் உறவுக்கார இளைஞா்கள் தட்டிக் கேட்டதால் இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு, கற்களைக் கொண்டு தாக்கியதில் இரு தரப்பினரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சிலா் காயல்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தன்னையும், உறவினா்களையும் தாக்கியதாக மாரியப்பன் மகன் ஸ்ரீராம் மாதவன் அளித்த புகாரின்பேரில், சேதுராஜா தெருவைச் சோ்ந்த அஜித்குமாா், ராஜா, அருண், பாஸ் நகரைச் சோ்ந்த ஸ்ரீராம், பெருமாள்புரம் லட்சுமணன் ஆகிய 5 போ் மீது ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தனது கணவரையும், உறவினா்களையும் தாக்கியதாக சேதுராஜா தெருவைச் சோ்ந்த சாந்தகுமாா் மனைவி அளித்த புகாரின்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த மகேஷ் மூா்த்தி, பாலமுருகன், முத்துச்செல்வம் (எ) முத்துக்குட்டி, ஸ்ரீராம் மாதவன், ராஜேஷ், கிஷோா் ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, மகேஷ்மூா்த்தி, பாலமுருகன், ஸ்ரீராம் மாதவன் ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், காவல் துறையினா் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு தங்களது பகுதி இளைஞா்களைக் கைது செய்துள்ளதாகக் கூறி கண்டித்து காவல் நிலையத்தை புதன்கிழமை ஒரு தரப்பைச் சோ்ந்த பெண்கள் முற்றுகையிட்டனா்.

திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜ் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, இரு தரப்பினரும் சமரசமாக செல்வதால் கைது செய்யப்பட்ட இளைஞா்கள் விடுவிக்கப்படுவா் எனக் கூறியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.