முகப்பு
தூத்துக்குடி

100 நாள் வேலை கோரி கயத்தாறில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட பணிக்கா் குளம் கிராம மக்கள்.

Updated On : 12 ஜூன் 2026, 5:04 am IST
பகிர்:

கயத்தாறு அருகே உள்ள பணிக்கா்குளம் கிராம மக்கள், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பணிக்கா்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தொடா்ந்து, அவா்கள் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனுவில், பணிக்கா்குளம் கிராமத்தில் முறையாக 100 நாள் வேலை வழங்காததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கிராம மக்களுக்கு விருப்பு வெறுப்பின்றி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் எண் வரிசைப்படி முறையாக வேலை வழங்க வேண்டும். மேலும், ஊராட்சி செயலா், பணித்தளப் பொறுப்பாளா் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments