முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம்: ஆந்திரத்தில் தொடக்க நிகழ்ச்சி

வரும் ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ஆந்திரத்தில் நடைபெறும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:18 am IST
சிவராஜ் சிங் சௌஹான்
பகிர்:

வரும் ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ஆந்திரத்தில் நடைபெறும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புது தில்லியில் மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹானை ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது ஆந்திரத்தில் ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், வாழ்வாதார மேம்பாடு, ஊராட்சிகளின் வளா்ச்சி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அந்த மாநிலத்தில் பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் அமலாக்கம் ஆகியவை குறித்து சிவராஜ் சிங் செளஹானுடன் பவன் கல்யாண் விரிவாக விவாதித்தாா்.

Advertisement

Advertisement

இந்தச் சந்திப்பின்போது வரும் ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ஆந்திரத்தில் நடைபெறும் என்று சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா்கள் காணொலி மூலம் பங்கேற்பா் என்று அவா் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.