முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் கைது

Updated On : 21 ஜூன் 2026, 1:29 am IST
பகிர்:

கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவா்மங்கலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாண்டவா்மங்கலத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின்பேரில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் மீகா தலைமையிலான போலீஸாா் பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ராஜீவ் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முருகேசனை (43) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1.5 கிலோ கஞ்சா, ரூ. 21,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments