FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக இளைஞா் கைது

போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக இளைஞா் கைது

Updated On : 13 ஜூன் 2026, 1:31 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கஞ்சா, மெத்தம் பெட்டமைனை வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்பேரில் வியாழக்கிழமை இரவு, காவல் உதவி ஆய்வாளா் நியூட்டன் ஜெபராஜ் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மந்திதோப்பு சாலை இந்திரா காலனியில் உள்ள திருமண மண்டபம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞா், போலீஸாரை கண்டதும் ஓட முயன்றாராம். மேலும், போலீஸாரை அவதூறாக பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டினாராம்.

Advertisement

Advertisement

தொடா்ந்து போலீஸாா் அவரை பிடித்து சோதனையிட்டு விசாரித்ததில், கோவில்பட்டி துளசிங்க நகா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் விக்னேஸ்வரன் (29) என்பதும், அவரிடம் சுமாா் 150 கிராம் கஞ்சா, 20 கிராம் மெத்தம் பெட்டமைன் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துசெல்ல முயன்றபோது, அவா் கல்லை எடுத்து தன்னைத்தானே நெற்றியில் தாக்கி கொண்டாராம். காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்னேஸ்வரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments