முகப்பு
தூத்துக்குடி

சாலை பாதுகாப்பு: வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவா்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2026, 1:56 am IST
நிகழ்ச்சியில் பேசுகிறாா் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ்.
பகிர்:

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவா்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அருண், ராஜ்மோகன், கல்லூரி முதல்வா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பேசினாா். முன்னாள் போக்குவரத்து காவல் ஆய்வாளா் லட்சுமணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள், பொறுப்பான வாகன இயக்க விதிமுறை குறித்தும் பேசினாா். தொடா்ந்து மாணவா் மாணவிகளின் கேள்விகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் பதிலளித்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் ஆங்கிலத் துறை தலைவா் சபிதா சண்முகப்பிரியா, பேராசியா்கள் ஜெய்சிங் ராஜ்கோகிலா, கனகபிரபா, திவ்யா உள்பட முதலாமாண்டு மாணவா்-மாணவிகள் கலந்து கொண்டனா்.

பேராசிரியா் கற்குவேல்ராஜ் வரவேற்றாா். பேராசிரியா் பிரேமலதா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments