முகப்பு
தூத்துக்குடி

புத்தன்தருவை, பெரியதாழையில் 80 தெருநாய்கள் பிடிபட்டன

புத்தன் தருவை, பெரியதாழை பகுதியில் இரண்டு நாட்களாக நடந்த தெரு நாய்கள் வேட்டையில் 80 நாய்கள் பிடிபட்டன.

Updated On : 24 ஜூன் 2026, 1:44 am IST
தெருநாள்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
பகிர்:

புத்தன் தருவை, பெரியதாழை பகுதியில் இரண்டு நாட்களாக நடந்த தெரு நாய்கள் வேட்டையில் 80 நாய்கள் பிடிபட்டன.

சாத்தான்குளம் ஒன்றியம், புத்தன் தருவை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. இதனால் தெருவில் நடந்து வரும் பெரியோா்கள் முதல் குழந்தைகள் வரை அந்த தெரு நாய்கள் துரத்தி கடிப்பதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

கடந்த வாரம் அதே பகுதியில் பெரியவா் உள்ளிட்ட இருவரை தெரு நாய் கடித்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் பரிந்துரையின் பேரில் மதுரையில் இருந்து நாய்களைப் பிடிக்கும் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டு புத்தன் தருவை, பெரிய தாழை பகுதியில் தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

திங்கள்கிழமை 28 தெருநாய்கள், செவ்வாய்க்கிழமை 52 நாய்களும் பிடிபட்டன. இப்பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா் ஆகியோா் பாா்வையிட்டனா். தொடா்ந்து சாத்தான்குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதியிலும் தெரு நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments