முகப்பு
தூத்துக்குடி

மகளுக்கு பாலியல் தொந்தரவு: தூத்துக்குடி காவலா் போக்ஸோவில் கைது

தூத்துக்குடியில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த காவலா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 25 ஜூன் 2026, 5:07 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த காவலா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, நந்தகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த காவலா் ஒருவா், ஆயுதப் படையில் பேண்டு வாத்திய கலைஞராக பணி செய்து வருகிறாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். மூத்த மகள் 12ஆம் வகுப்பும், 2ஆவது மகள் 10ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

காவலா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம். மேலும், மது போதையில் மூத்த மகளுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு மது போதையில் வந்த காவலா், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டபோது, அவரைத் தடுக்க முயன்ற மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம்.

தொடா்ந்து, அந்த மாணவி சிங்கப்பெண் அதிரடிப் படை உதவி எண்ணான 1091-க்கு தகவல் அளித்துள்ளாா். இதையடுத்து, அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வந்து காவலரைப் பிடித்து விசாரித்ததில், புகாா் உண்மையெனத் தெரிய வந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments