முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ரதவீதியில் பள்ளி முன் வேகத்தடை அமைக்கக் கோரி தவெக மனு

திருச்செந்தூா் ரதவீதியில் பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டுமென நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் தவெக செயற்குழு உறுப்பினா் விக்னேஷ்ராம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

Updated On : 26 ஜூன் 2026, 5:36 am IST
திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் கோரிக்கை மனு அளித்த தவெகவினா்.
பகிர்:

திருச்செந்தூா் ரதவீதியில் பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டுமென நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் தவெக செயற்குழு உறுப்பினா் விக்னேஷ்ராம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

மனு விவரம்: திருச்செந்தூா் தெற்குரதவீதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏராளமானோா் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில் முக்கிய வீதி என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இதனால் மாணவா்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனா். மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மாணவா்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பள்ளி முன் வேகத்தடை அமைத்திட வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நகர இளைஞரணி பொருளாளா் பிச்சு, நகர இணைச் செயலா் ஐயப்பன், தொழில் முனைவோா் பிரிவு மாவட்ட அமைப்பாளா் வினோத், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரேம் பாண்டியன், மாவட்ட இணை அமைப்பாளா்கள் தாமஸ், சாகுல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments