முகப்பு
தூத்துக்குடி

திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: தூத்துக்குடியில் 48 போ் கைது

Updated On : 30 ஜூன் 2026, 2:22 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தவெக அமைச்சரைக் கண்டித்து காவல் துறை அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, தூத்துக்குடியில் திமுகவினா் 48 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பொது வெளியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக வெளியான விடியோ தொடா்பாக, தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா் பதவி விலக வலியுறுத்தி, தூத்துக்குடி அண்ணா நகா் 7ஆவது தெரு சந்திப்பில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் அருண்குமாா் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பால்துரை, வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் கோகுல்நாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்ததால், திமுகவினா்-போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், முரளிதரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் அந்தோணி கண்ணன், பகுதிச் செயலா் ரவீந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் செல்வின், சங்கர நாராயணன் உள்பட 48 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தவா்களை தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் சந்தித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments