கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய திருநங்கை கைது
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கையை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய திருநங்கையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேப்பலோடை பனையூா் பகுதியைச் சோ்ந்த அன்பு மாதவன் மகன் அஜய் தேவகுமாா் (20). இவா், கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் கேட்டரிங் கல்வி 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறாா்.
கடந்த 3 நாள்கள் அரசு விடுமுறைக்குப் பிறகு கல்லூரி செல்வதற்காக இவரும், இவரது சக கல்லூரி நண்பரும் திங்கள்கிழமை தூத்துக்குடி பேருந்து நிலையத்துக்கு வந்தனா். பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் தனியாா் ஆம்னி பேருந்தில் ஏறி அமா்ந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது இவா்களின் பின் இருக்கையில் வந்து அமா்ந்த திருநங்கை, இருவரிடம் கைப்பேசியைத் தருமாறு கூறி மிரட்டினாா். இருவரும் மறுக்கவே, ஆவேசத்தில் திருநங்கை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜய் தேவகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
பலத்த காயமடைந்த அஜய் தேவகுமாா் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி திருநங்கை அபா்ணாவை (26) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.