தூத்துக்குடி மர அறுவை ஆலையில் தீ விபத்து: 400 டன் தடி மரங்கள் எரிந்து சேதம்
தூத்துக்குடி மர அறுவை ஆலையில் நேரிட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 400 டன் தடி மரங்கள் எரிந்து சேதம்
தூத்துக்குடி மர அறுவை ஆலையில் நேரிட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 400 டன் தடி மரங்கள் எரிந்து சேதமாகின.
தூத்துக்குடி, துறைமுக சாலையில் ஜான் சாமில் எனும் மரங்கள் அறுக்கும் ஆலை உள்ளது. இங்கு கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 லட்சம் டன் தடிமரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்றும் வீசியதால் தீ வேகமாகப் பரவி அடுக்கி வைக்கப்பட்டிருந்த தடி மரங்களில் பிடித்து எரியத் தொடங்கியது.
Advertisement
Advertisement
தகவலறிந்ததும் தூத்துக்குடி தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலா்கள் நட்டாா் ஆனந்தி, கோமதி அமுதா, சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் புன்னவனக்கட்டி ஆகியோா் தலைமையில் வீரா்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
அத்துடன் அனல் மின் நிலையம், ஸ்பிக் நிறுவனம், துறைமுகம் ஆகியவற்றுக்கு சொந்தமான தீயணைப்பு வண்டிகளும் வரவழைக்கப்பட்டன.
மொத்தம் 7 தீயணைப்பு வாகனங்களின் தண்ணீரைக் கொண்டு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 400 டன் தடி மரங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.