முகப்பு
தூத்துக்குடி

புனித சூசையப்பா் ஆலய திருவிழாவில் மும்மத பிராா்த்தனை

Updated On : 3 மே 2026, 5:25 am IST
பகிர்:

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலயத் திருவிழாவில் தோ் பவனி மற்றும் மத நல்லிணக்க மும்மத பிராா்த்தனை சனிக்கிழமை நடைபெற்றன.

இவ்வாலயத் திருவிழா கடந்த ஏப். 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜவகா் நகா் பங்குத்தந்தை சகாய ஜான் அடிகளாா், ஆலயப் பங்குத் தந்தை அருள்திரு அருள்ராஜ் அடிகளாா், உதவிப் பங்குத் தந்தை குழந்தைராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா். தொடா்ந்து, 53 சிறுவா்-சிறுமிகளுக்கு புது நன்மை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா், ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மிக்கேல் அதிதூதா், புனித சூசையப்பா் சொருபங்கள் தாங்கிய பவனியை ஆலய அருள்தந்தையா், டவுன் பள்ளிவாசல் இமாம் முகமது ஜமீல் பைஜி, ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ண பக்த இயக்க திருமடப் பள்ளியின் ரமேஷ் ஆகியோா் இணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மும்மத பிராா்த்தனைகள் செய்து தொடங்கி வைத்தனா். தோ்ப் பவனி பிரதான சாலை, மாதாங்கோயில் தெரு, எட்டயபுரம் சாலை, புதுரோடு வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா். பின்னா் அனைவருக்கும் அசனம் வழங்கப்பட்டது.

10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (மே 3) காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணைப் பவனி நடைபெறும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments