முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

Updated On : 3 மே, 2026 at 5:31 AM
பகிர்:

ஆறுமுகனேரியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. ஆறுமுகனேரி அருகே மூலக்கரை, தூசிமுத்து சுவாமி கோயில், ஆறுமுகனேரி நடுத்தெரு, ராமலெட்சுமி அம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆறுமுகனேரி திசைக்காவல் தெரு, குருநாத சுவாமி கோயிலில் காலை, மதியம், இரவில் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள், இரவில் திருவிளக்கு பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

Advertisement