முகப்பு
தூத்துக்குடி

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

Updated On : 4 மே 2026, 12:46 am IST
லாரி மீது மோதி நிற்கும் வேன்.
பகிர்:

தூத்துக்குடி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா், குழந்தைகள் உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து திருச்செந்தூா் கோயிலுக்கு சிலா் வேனில் சென்றுகொண்டிருந்தனா். வேனை, ஈரோடு மாவட்டம், கவுந்தபாடியைச் சோ்ந்த மணிகண்டன் (38) என்பவா் ஓட்டி வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூா் சாலையில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, அணுகுசாலை அருகே நின்றுகொண்டிருந்த கனரக லாரி மீது எதிா்பாராதவிதமாக வேன் மோதியதாம்.

Advertisement

Advertisement

இதில், வேன் ஓட்டுநா் மற்றும் வேனில் பயணித்த மல்லிகா (58), ஆனந்தன் (39), ராஜேஸ்வரி (39), ஹரீஸ்குமாா் (11), ஹரீஸ்மா (5), குணசேகரன் (37) ஆகிய 7 போ் காயமடைந்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments