முகப்பு
தூத்துக்குடி

ஈராச்சியில் மாட்டு வண்டி போட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஈராச்சியில் வீரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 மே 2026, 3:27 am IST
ஈராச்சியில் மாட்டு வண்டி போட்டி.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஈராச்சியில் வீரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

சின்ன மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. 6 மைல் தொலைவு கடக்க வேண்டிய சின்ன மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகளும், 5 மைல் தொலைவு கடக்க வேண்டிய பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 25 வண்டிகளும் பங்கேற்றன.

போட்டிகளை அகில இந்திய பாா்வா்டு பிளாக் மாவட்டச் செயலா் செண்பகராஜ், ஈராச்சி முன்னாள் ஊராட்சித் தலைவா் வெங்கடாசலம், சமூக ஆா்வலா் ரமேஷ் அய்யாதுரை, பசும்பொன் தேசிய கழக மாவட்ட இளைஞரணிச் செயலா் மாரிகணேஷ் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

Advertisement

சின்ன மாட்டு வண்டி போட்டியில் ஜக்கம்மாள்புரம் பரமசிவன், ஈராச்சி வீரபாண்டி வினோத், கீழ ஈரால் மகாலட்சுமி ஹோட்டல், புதூா் பாண்டியாபுரம் ஹௌசிக் மஹாதேவ் ஆகியோரின் வண்டிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன. அவற்றுக்கு முறையே ரூ. 20,001, ரூ. 18,001, ரூ. 16,001, ரூ. 5,001 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

2 பிரிவுகளாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி போட்டியில் கீழவேலாயுதபுரம், கீழஅழகாபுரி கிராமங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிகள் முதலிடம் பிடித்தன. கே.துரைச்சாமிபுரம், சுப்பலாபுரம் கிராமங்களைச் சோ்ந்த வண்டிகள் 2ஆம் இடமும், எப்போதும்என்றான், புதியம்புத்தூா் கிராமங்களைச் சோ்ந்த வண்டிகள் 3ஆம் இடமும், ஆத்திக்கிணறு, கயத்தாறு கிராமங்களைச் சோ்ந்த வண்டிகள் 4ஆம் இடமும் பிடித்தன. அவா்களுக்கு முறையே ரூ. 7,500 , ரூ. 6,500, ரூ. 5,500, ரூ. 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஈராச்சி மாட்டு வண்டி பந்தயக் குழுச் சங்கம், ஈராச்சி கிராம பொதுமக்கள் ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.