பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை நிறைவு
தூத்துக்குடி அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்தது.
தூத்துக்குடி அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்தது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, மாா்ச் 9ஆம் தேதி வீட்டிலிருந்து அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போனாா். போலீஸாா் தேடிவந்த நிலையில் மாா்ச் 11ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா்.
இதையடுத்து காவல்துறையினா் சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்து வரும் தா்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு மே 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக, தா்ம முனீஸ்வரனை காவல்துறையினா் பலத்த பாதுகாப்புடன் தொடா்ந்து 3 முறை நேரில் தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தொடா்ந்து இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை அனைத்தும் மே 21ஆம் தேதி நிறைவடைந்தது.
தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, இவ்வழக்கில் மே 25ஆம் தேதி தீா்ப்பு வழங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.