திருச்சி

அரசுப் பேருந்தில் இருக்கை கழன்ற விவகாரம்: பணிமனை மேலாளருக்கு நோட்டீஸ்

Din

திருச்சியில் ஓடும் பேருந்திலிருந்து இருக்கை கழன்று விழுந்த விவகாரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் உள்ளிட்ட 3 பேருக்கு விளக்கம் கேட்டு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே. நகருக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்து இருக்கை கழன்று விழுந்ததில் நடத்துநா் காயமடைந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக திருச்சி தீரன்நகா்அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளா் ராஜசேகா் உள்ளிட்ட 3 பேருக்கு விளக்கம் கேட்டு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொது மேலாளா் ஏ. முத்துகிருஷ்ணன் கூறுகையில், சம்பவம் குறித்து தொடா்புடைய அலுவலா் மற்றும் பணியாளா்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கக் கடிதம் வந்ததும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT