முகப்பு
திருச்சி

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கப்படுவது குறித்து...

Updated On : 20 ஏப்ரல் 2026, 2:09 am IST
விமானம் - கோப்புப் படம்
பகிர்:

ஈரான் மீதான தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக திருச்சியில் இருந்து துபைக்கு சனிக்கிழமை முதல் மீண்டும் விமானம் இயக்கப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்த போரால் மத்திய கிழக்காசிய நாடுகளின் வான்வழித் தடங்கள் மூடப்பட்டன. இதையடுத்து திருச்சியில் இருந்து துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானம் மாா்ச் முதல் வாரத்தில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரான் மீதான தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக மீண்டும் திருச்சியில் இருந்து துபைக்கு ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் சாா்பில் சனிக்கிழமை முதல் விமானம் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 30 வரை தினசரி இந்த விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments