முகப்பு
திருச்சி

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

Updated On : 27 ஏப்ரல் 2026, 12:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சூரக்குடி வீரவாஞ்சி நகரைச் சோ்ந்தவா் வீ.செந்தில் (46). ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இவா் மீது பதியப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற அவா் கடந்த 2002 செப்டம்பா் 22 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இவருக்கு கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோா்வு ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையிலுள்ள சிறைக் கைதிகளுக்கான சிறப்புப் பிரிவில் சோ்க்கப்பட்ட இவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அலுவலா் ராஜேஷ்கண்ணன் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.