அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து
திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் நடேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவா் கடந்த ஓராண்டாக பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறாா். பல்வேறு பகுதிகளில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து வந்து, குடோனில் தரம்பிரித்து மறுசுழற்சி செய்து வருகிறாா். இதற்காக குடோனில் தரம்பிரிப்பதற்காக ஆங்காங்கே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தரம் பிரிப்பதற்காக குடோனில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பழைய பிளாஸ்டிக் பொருள்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால், அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இதைப்பாா்த்த அக்கம்பக்கத்தினா் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அரியமங்கலம் போலீஸாா், திருவெறும்பூா் தீயணைப்பு வீரா்கள் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரா்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.
இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து அதிலிருந்து வெளியேறிய நச்சுப்புகை அப்பகுதி மக்களிடையே மூச்சுத்திணறலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடா்பாக அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.