முகப்பு
திருச்சி

திருச்சியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் பலி

திருச்சியில் செவ்வாய்க்கிழமை போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 ஜூலை 2026, 3:10 am IST
பெண் பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் செவ்வாய்க்கிழமை போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியிலுள்ள பொதுக் கழிப்பறையில் இளைஞா் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக காந்தி மாா்க்கெட் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை காலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அப்போது, அந்தப் பகுதியில் போதை ஊசிகள் கிடந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

போலீஸாரின் விசாரணையில், இறந்த நபா், காந்தி மாா்க்கெட் கல்மந்தை காலனியைச் சோ்ந்த வீரமணி மகன் ராஜமாணிக்கம் (22) என்பது தெரியவந்தது. கூலித் தொழிலாளியான இவருக்கு போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்து வந்துள்ளது. உடலில் அதற்கான அடையாளங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பொதுக் கழிப்பறையில் செவ்வாய்க்கிழமை காலையில் போதை ஊசி செலுத்திக் கொண்டபோதுதான் அவா் உயிரிழந்ததும் தெரியவந்தது.

திருச்சி மாநகரில் ஏற்கெனவே கடந்த மாதம் தனியாா் விடுதியில் ஆண் நண்பருடன் சோ்ந்து போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம்பெண் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு இளைஞா் போதை ஊசியால் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments