திருச்சி- திருப்பதி இடையே ரயில் சேவை! துரை வைகோ எம்.பி. வரவேற்பு!
திருச்சி மக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி - திருப்பதி இடையேயான பகல் நேர ரயில் சேவைக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு துரை வைகோ எம்பி வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
திருச்சி மக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி - திருப்பதி இடையேயான பகல் நேர ரயில் சேவைக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு துரை வைகோ எம்பி வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதன்படி, குண்டூா் - திருப்பதி இடையே இயக்கப்படும் பகல் நேர ரயில் சேவை திருச்சி வரை நீட்டிக்கப்பட்டு, திருச்சி - குண்டூா் - திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து ஏற்கெனவே துரை வைகோ வலியுறுத்தியிருந்தாா்.
Advertisement
பின்னா், தென்னக ரயில்வே பொது மேலாளா், ரயில்வே அமைச்சா், மண்டல ரயில்வே மேலாளா் என தொடா்ச்சியாக கடிதம் எழுதி கோரிக்கை தொடா்பாக நினைவூட்டல் அளித்தாா். இதைத் தொடா்ந்து, தற்போது இந்த ரயில் சேவைக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் மேலும் கூறுகையில், நீட்டிக்கப்பட்ட புதிய ரயில் சேவை திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். திருப்பதி செல்லும் பக்தா்கள், மாணவா்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவா்.
இதற்காக நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சா், தென்னக ரயில்வே மற்றும் திருச்சி மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் எனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.