அரியலூர்

அர்ச்சினாபுரம் ஜல்லிக்கட்டு: 20 பேர் காயம்

DIN

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 20 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக கிராம முக்கியஸ்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்ததை தொடர்ந்து, வாடிவாசலிருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 160 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது வாடிவாசலில் இருந்து சீறிவந்த காளைகள் முட்டியதில்  லால்குடி சுந்தர்(27), சமயபுரம் சுபாஷ்(25), திருமானூர் சிவக்குமார்(35), கல்லக்குடி சுந்தர்ராஜ்(33) உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள்,சில்வர் பாத்திரங்கள்,கட்டில்,சேர்,வேட்டி,சேலை உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT