அரியலூர்

முதன்மைக் கல்வி  அலுவலரை ஏமாற்றி  ரூ. 78,000  மோசடி

DIN

அரியலூர் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலரை ஏமாற்றி அவரது வங்கிக் கணக்கில் ரூ. 78 ஆயிரம் எடுக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான ஆ. புகழேந்தி கடந்த  6 ஆம் தேதி  இரும்புலிக்குறிச்சி மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றபோது அவரை செல்லிடபேசியில் தொடர்புக் கொண்ட மர்ம நபர் மும்பையில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஏடிஎம் கார்டில் சிப் பொருத்த வேண்டும் எனவும் கூறி, ஏடிஎம் கார்டு ரகசிய எண் அனைத்து தகவல்களையும் பெற்று, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 78 ஆயிரத்தை எடுத்துவிட்டாராம்.
இதுகுறித்து அவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை  வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT