அரியலூர்

அரியலூரில் உரம் விற்போருக்கு பயிற்சி

DIN

அரியலூர் மாவட்டம் த. வளவெட்டி குப்பத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் உர விற்பனையாளர்களுக்கான பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் இணை இயக்குநர் (பொ) இளங்கோவன் தலைமை வகித்துப் பேசினார். உதவி இயக்குநர் ராஜேந்திரன்  முன்னிலை வகித்து பேசினார். வேளாண் அலுவலர் சுப்பிரமணியன் உர  விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்தார். 
பயிற்சியில், அனைத்து உர விற்பனையாளர்களும்,விவசாயிகளுக்கு அவர்களது மண் வள அட்டையில்  பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அளவில் மட்டுமே உரங்களை வழங்க வேண்டும். 
மேலும் மக்காச்சோளத்தில்  படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பரிந்துரைத்து வழங்க வேண்டிய பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT