அரியலூரில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழக கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழக கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உயர்த்தியுள்ள கட்டண உயர்வை திரும்ப பெற்று,பொதுமக்கள் மிக குறைந்த கட்டணத்தில் கேபிள் பார்க்கும் வசதியினை ஏற்படுத்தி தரவேண்டும். கேபிள் டி.வி இணைப்புக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியை 5 %மாகக் குறைக்க வேண்டும். கட்டணச் சேனல்களின் விலை உயர்வை தடுத்த நிறுத்த மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.