அரியலூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை தேவை

DIN

மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைப்பது முக்கியமல்ல, முதலில் காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி: காவிரி பிரச்னை தொடர்பாக பிப்.23 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் நடைபெறக் கூடிய அனைத்து கட்சி கூட்டம் வரவேற்கத்தக்கது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சிகள் காழ்ப்புணர்ச்சியை விட்டு காவிரி பிரச்னையில் நல்ல தீர்வு காணவேண்டும். அரசின் அழைப்பு வந்தால் கூட்டத்தில் பங்கேற்பேன்.  தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை மோடி தொடங்கி வைப்பதாகக் கூறப்படுகிறது. இது கண்டிக்தக்கது. பிரதமர் மோடி முதலில் செய்ய வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி காவிரி மோலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவாசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT