கண்டராதித்தம் பெரிய ஏரியை தூர்வார நடவடிக்கை: மன்னார்குடி ரெங்கநாதன்
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கண்டராதித்தம் பெரிய ஏரி அரசின் முழு ஒத்துழைப்போடு, விவசாயிகளைக் கொண்டு
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கண்டராதித்தம் பெரிய ஏரி அரசின் முழு ஒத்துழைப்போடு, விவசாயிகளைக் கொண்டு தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மன்னார்குடி ரெங்கநாதன்.
திருமானூர் ஒன்றியம் கண்டராதித்தம் கிராமத்தில் கண்டராதித்த சோழனால் வெட்டப்பட்ட சுமார் 416 ஏக்கர் கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் தண்ணீரைக் கொண்டு திருமானூர் ஒன்றியத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
நாளடைவில், இந்த ஏரி தூர்ந்து, சீமைக்கருவேல மரங்கள் முளைத்து தற்போது, தண்ணீர் சேமித்து வைக்கமுடியாத நிலையில் உள்ளது. இந்த ஏரியை தூர்வார பொதுமக்களும், விவசாயிகளும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை கண்டராதித்தம் பெரிய ஏரியை பார்வையிட்ட காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலர் மன்னார்குடி ரெங்கநாதன் பின்னர் கூறுகையில், இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகளை காப்பாற்ற விவசாயிகள் ஒன்று சேர்ந்து குழு அமைத்து, ஆலோசனைக்கூட்டம் நடத்தி அரசின் முழு ஒத்துழைப்போடு ஏரியை தூர்வார முயற்சி மேற்கொள்வோம். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.