அரியலூர்

பொன்பரப்பி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் உள்ள மாரியம்மன், சாமுண்டீசுவரி அம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சக்தி அழைத்தல், அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன், சாமுண்டீசுவரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். 
தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே சென்று நிலையை அடைந்தது. வீடுதோறும் மா விளக்கு, தீபாராதனை காண்பித்து மக்கள் வழிபட்டனர். தொடர்ந்து, மாலை அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT