அரியலூர்

விவசாயிகள் கவனத்துக்கு...

DIN

அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் தற்பொழுது கிடைக்கப்பட்ட மழையினால் கோடை உழவுப்பணி முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த வட்டாரத்தில் மானாவாரி நிலப்பகுதிகளில் 7,000 எக்டருக்கு மேல் மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இப்பயிரில் சென்ற ஆண்டு ராணுவப் படைப்புழுவின் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஆண்டில் மக்காச்சோளத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்திய ராணுவப்புழு கூண்டுப்புழுவாக மாறி மண்ணில் புதைந்துள்ளது. இந்தக் கூண்டுப் புழு அடுத்த நிலையான தாய் அந்துப் பூச்சியாக மாறாமல் இருக்க கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கினை மண்ணில் இட வேண்டும்.
 மேலும் இந்தப் புண்ணாக்கில் உள்ள அசாடிராக்டின் என்ற மூலக்கூறு ராணுவப்புழுவில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தி மேலும் பரவாமல் கட்டுப்படுத்துகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ராணுவப் படைபுழுவினை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறளாம் என்று திருமானூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆர்.லதா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT