அரியலூர்

கோவில்எசனை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

அரியலூர் : அரியலூர் மாவட்டம், திருமழபாடி அருகே கோவில்எசனை கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றுத்தடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் திருவீதியுலா நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதி மக்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 40 அடி உயரமுள்ள தேரில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவில், கலந்து கொண்ட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  செவ்வாய்க்கிழமை காலை முளைபாரி மற்றும் காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT