அரியலூர்

பத்தாம் வகுப்பு தேர்வு: அரியலூரில் 10,709 பேர் எழுதினர்

DIN

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை அரியலூர் மாவட்டத்தில் 225 தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 10,709 பேர் எழுதினர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம்,செந்துறை ஆகிய கல்வி மாவட்டத்தில் உள்ள 173 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 10,484 பேர் வியாழக்கிழமை தொடங்கிய 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். 260 பேர் தேர்வெழுத வரவில்லை.
இதேபோல், தனித்தேர்வர்கள் 225 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். 29 பேர் தேர்வெழுதவரவில்லை.பொதுத்தேர்வையொட்டி 49 மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர், துணை அலுவலர் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் என 90 பேர் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுப்பட்டனர்.
வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும், தேர்வு முடிந்து விடைத்தாள்களை பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டுவரவும் அரியலூர் கல்வி மாவட்டத்தில் 4 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 6 வழித்தட அலுவலர்களும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT