அரியலூர்

சுமை ஆட்டோ மோதி காயமடைந்த  தொழிலாளி சாவு

DIN

விக்கிரமங்கலம் அருகே சுமை ஆட்டோ மோதி காயமடைந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகையன்(35).இவர் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் தங்கி,அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை வி.கைகாட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பின்னால் வந்த சுமை ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகையன், அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT